மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் மசோதா தாக்கல்

மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் தாக்கல் செய்யப்பட்டது.

ஜனவரி 11

மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் தாக்கல் செய்யப்பட்டது.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களை கடந்த 2015-ம் ஆண்டு வரை நேரடியாக மக்களே தேர்வு செய்து வந்தனர். கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி, இந்த முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களின் பெரும்பான்மை அடிப்படையில் தலைவரை தேர்வு செய்யும் முறை தற்போது அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்த முறையில் மீண்டும் மாற்றம் கொண்டுவருவதற்கான சட்ட மசோதா தமிழக சட்டசபை இன்று தாக்கல் செய்யப்பட்டது. உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்த மசோதாவை தாக்கல் செய்தார். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களை மக்களே தேர்வு செய்ய இந்த மசோதா வகை செய்கிறது.

தனி அதிகாரிகளின் பதவிகாலம் நீட்டிப்பு

முன்னதாக, உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதாவும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...