விசாரணை ஆணையம் முன்பு மீண்டும் ஆஜரானார் ஷீலா பாலகிருஷ்ணன்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஷீலா பாலகிருஷ்ணன் இன்று மீண்டும் ஆஜரானார்.

ஜனவரி 11

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஷீலா பாலகிருஷ்ணன் இன்று மீண்டும் ஆஜரானார். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.

இதில், சசிகலா உறவினர் கிருஷ்ணபிரியா, ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் தீபக், அரசு மருத்துவர்கள், தி.மு.க. பிரமுகர் டாக்டர் சரவணன், தலைமை செயலாளராக இருந்த ராமமோகனராவ், ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் உள்பட பலர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

முன்னாள் தலைமை செயலாளராகவும், அரசு ஆலோசகராகவும் இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஏற்கனவே, கடந்த 20-ம் தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்து இருந்தார். இந்த நிலையில் ஷீலா பாலகிருஷ்ணனை மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து இன்று காலை ஷீலா பாலகிருஷ்ணன் சேப்பாக்கத்தில் உள்ள விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.

அப்போது, ஷீலா பாலகிருஷ்ணனிடம் ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் மேலும் சில தகவல்களை நீதிபதி ஆறுமுகசாமி விசாரித்தார். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக அவரிடம் விசாரிக்கப்பட்டது. 

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற போது, ஜெயலலிதாவை நேரில் பார்த்ததாக சாட்சியம் அளித்த 4 பேரில் ஷீலா பாலகிருஷ்ணனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...