பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் 12-ம் தேதி சிறப்பு விடுமுறை

ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் 12ம் தேதி சிறப்பு விடுமுறையைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஜனவரி 10

ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் 12ம் தேதி சிறப்பு விடுமுறையைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் பேருந்துகள் முழு அளவில் இயங்கவில்லை. போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினர். பள்ளி செல்லும் மாணவர்களும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினர். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். பள்ளிக்கு நீண்ட தொலைவு செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். போராட்டம் முடிவுக்கு வராத நிலையில், சிறப்பு நிகழ்வாக அனைத்துப் பள்ளிகளுக்கும் 12-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இதன்மூலம், வெள்ளிக்கிழமையுடன் சேர்த்து போகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக கலாச்சாரம், பாரம்பரியத்தைப் பேணிக்காக்கும் பொருட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...