ஒப்பந்தத்தை திரும்பப் பெற்றால் பணிக்கு திரும்பத் தயார் : உயர்நீதிமன்றத்தில் சிஐடியு அறிவிப்பு

ஊதிய உயர்வு தொடர்பாக அரசின் ஒப்பந்தத்தை அரசு திரும்ப பெற்றுக் கொண்டால், பணிக்குத் திரும்ப தயாராக இருப்பதாக சிஐடியு தொழிற்சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஜனவரி 10

ஊதிய உயர்வு தொடர்பாக அரசின் ஒப்பந்தத்தை அரசு திரும்ப பெற்றுக் கொண்டால், பணிக்குத் திரும்ப தயாராக இருப்பதாக சிஐடியு தொழிற்சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 4-ந் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். திமுக உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். பெரும்பாலான ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணிக்கு வராததால் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், தமிழகம் முழுவதும் பேருந்து போக்குவரத்து முடங்கி உள்ளது. தமிழக அரசும் ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. 

வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனிடையே, ரூ.750 கோடி ஊழியர்களுக்கு வழங்கப்படும் என முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்த நிலையில், ரூ. 7,000 கோடி நிலுவைத்தொகை உள்ள நிலையில், ரூ. 750 கோடி ஏற்க முடியாது என்று கூறிய தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம் தொடரும் என்று அறிவித்தனர்.

இந்நிலையில், வேலைநிறுத்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நோட்டீஸ் அளித்த பின்னரே தற்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறோம் என்று சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் வாதாடப்பட்டது. 

அரசின் ஊதிய ஒப்பந்தத்தில் 32 தொழிற்சங்கங்கள் மட்டுமே கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. வேலை நிறுத்தத்திற்கு காரணம் அரசுதான், ஊழியர்கள் இல்லை என்று கூறிய சிஐடியு வழக்கறிஞர், நீடிக்கும் பிரச்சனைக்கு தீர்வு காண விரும்புவதாகவே தெரிவித்தார். ஓராண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்துள்ளதாக தொமுச வழக்கறிஞர் வாதிட்டார். ஊதிய உயர்வு தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தை அரசு திரும்பப் பெற்றால் பணிக்கு திரும்ப தயாராக இருப்பதாக சிஐடியு தெரிவித்தது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...