அரசின் ரூ. 750 கோடி ஒதுக்கீட்டை ஏற்க மறுப்பு: வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ரூ.750 கோடி நிலுவைத் தொகை வழங்குவதில் பலன் இல்லை எனவும், ஊதிய உயர்வு குறித்த எந்தவித அறிவிப்பும் இடம்பெறாததால், வேலைநிறுத்தம் நீடிக்கும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஜனவரி 10

ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ரூ.750 கோடி நிலுவைத் தொகை வழங்குவதில் பலன் இல்லை எனவும், ஊதிய உயர்வு குறித்த எந்தவித அறிவிப்பும் இடம்பெறாததால், வேலைநிறுத்தம் நீடிக்கும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. 

பேருந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற அடிப்படையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையில் ரூ.750 கோடி உடனடியாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று அறிவித்தார்.

இதனை ஏற்று பணிக்கு திரும்பும்படியும் அவர் கேட்டுக்கொண்டார். ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாத தொழிற்சங்கங்கள், பேருந்து ஸ்டிரைக் தொடரும் என அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் கூறியதாவது:- போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பிற துறையில் உள்ளவர்களுக்கு இணையாக சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். மின்சார வாரியம், ஆவின் போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2.57 காரணியைக் கொண்டு பெருக்கி வரும் தொகை அடிப்படை சம்பளமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இந்தப் பெருக்கத்தின் காரணியில் 13 குறைவாக 2.44 ஆக பெருக்கி வரும் தொகையை தராமல் கிடைக்கும் என்று கூறியதால்தான் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

இந்த வேறுபாடுகள் மிகவும் குறைவானது. இதை சரிசெய்ய வேண்டும் என்று கூறி இருந்தோம். ஆனால், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பல ஆண்டுகளாக அவர்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்து இதுவரையில் வழங்காமல் இருந்ததால் நீதிமன்றம் கடுமையாக கண்டித்ததின் பேரில் ரூ.1,700 கோடி வழங்க வேண்டிய இடத்தில் வெறும் ரூ.750 கோடி மட்டும் வழங்குவதாக செய்தி வெளியாகி உள்ளது. அதுவும் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கி விட்டு பணியில் இருப்பவர்களுக்கு வழங்காமல் இருப்பது முதலமைச்சரின் அறியாமையைக் காட்டுகிறது. அதனால் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் தொடரும்.

சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் கூறியதாவது:- தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதற்காகத்தான் இந்தப் போராட்டம் நடக்கிறது. ஊதிய மாற்றுக் காரணி குறித்து எதுவும் கூறாமல் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் நிலுவை தொகையை அறிவித்து இருப்பது ஏமாற்று வேலையாகும். இதனை ஏற்க இயலாது. எங்களது போராட்டம் தொடரும் என்றார்.

எச்.எம்.எஸ். தொழிற்சங்க சுப்பிரமணியம் கூறுகையில், நிலுவை தொகை எங்களுக்கு வர வேண்டியதுதான். அது பிரச்சனை இல்லை. 2.57 மாற்றுக் காரணி சம்பள உயர்வு வழங்க வேண்டும். 2003-ல் பணியில் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்புநிதி வழங்கப்படவில்லை. இதனைக் கொடுக்க வேண்டும். அதுவரையில் போராட்டம் தொடரும் என்றார். 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...