மாற்றியமைக்கப்பட்ட நெறிமுறைகளை கடைபிடித்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் : தமிழக அரசுக்கு பீட்டா கடிதம்

ஜல்லிக்கட்டுக்காக மாற்றியமைத்த நெறிமுறைகளை கடைபிடித்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு பீட்டா கடிதம் எழுதியுள்ளது.

ஜனவரி 10

ஜல்லிக்கட்டுக்காக மாற்றியமைத்த நெறிமுறைகளை கடைபிடித்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு பீட்டா கடிதம் எழுதியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு பிறகு, எந்தவித தடையும் இன்றி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஓரிரு தினங்களே உள்ள நிலையில், காளைகளும், மாடுபிடி வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் ஜனவரி 14 தொடங்கி 16 வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு கூடுதலாக ஒரு மணி நேரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விழாக் குழுவினருக்கும், கிராம மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், பீட்டா எனப்படும் விலங்குகள் நல வாரியம் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் தமிழக காவல்துறை இயக்குனருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், ”ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் துன்புறுத்தப்படக் கூடாது, அவற்றிற்கு காயம் ஏற்படக்கூடாது உள்ளிட்ட மாற்றியமைக்கப்பட்ட விதிகள் அனைத்தும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக விழா நடைத்தும் மாவட்ட நிர்வாகத்திற்கு முன் கூட்டியே சுற்றறிக்கை அனுப்பி வைக்க வேண்டும். 

ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகளை முன்கூட்டியே விலங்குகள் நல வாரியத்திற்கு தெரியப்படுத்திவிட்டால் அதற்கு ஏற்ப அதிகாரிகள் குழுவை நியமித்து அந்தந்த பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிட வசதியாக இருக்கும். மேலும், ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் ஆய்வு நடத்த 10 பேர் கொண்ட குழுவையும் விலங்குகள் நல வாரியம் நியமித்துள்ளது. இவர்கள் மாநில,மாவட்ட அதிகாரிகள் தரும் தகவல்களை பொறுத்து ஆய்வுகளை மேற்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...