எம்.எல்.ஏ.க்களின் ஊதிய உயர்வு மசோதாவிற்கு எதிர்ப்பு : திமுக வெளிநடப்பு

எம்.எல்.ஏக்களின் ஊதிய உயர்வு தொடர்பான மசோதா தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஜனவரி 10

எம்.எல்.ஏக்களின் ஊதிய உயர்வு தொடர்பான மசோதா தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

தமிழக சட்டமன்றத்தின் இன்றைய கூட்டத்தொடரில் எம்.எல்.ஏ-க்களின் ஊதிய உயர்வு மசோதாவை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த மசோதா நிறைவேறினால் சட்டமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியம் 55 ஆயிரம் ரூபாயில் இருந்து 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும். மசோதா நிறைவேற்றப்பட்டால் அரியர்ஸ் தொகையுடன் சேர்த்து சட்டமன்ற உறுப்பினர்கள் தலா 3லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுவர். முன்னாள் எம்எல்ஏக்கள் 20 ஆயிரம் ரூபாய் வரை ஓய்வூதியம் பெறுவர்.

எம்.எல்.ஏக்களின் ஊதிய உயர்வு தொடர்பான மசோதா தாக்கல் செய்ததற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். தமிழகம் பெரும் நிதிசுமையில் சிக்கியுள்ளதாக அரசே கூறிவரும் நிலையில், எம்.எல்.ஏக்கள் சம்பள உயர்வு தேவையா என மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினை இருக்கும் போது ஊதிய உயர்வு தேவை இல்லை என்றும் அவர் கூறினார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...