சபாநாயகரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வெளிநடப்பு : தினகரனும் அவை புறக்கணிப்பு

சபாநாயகர் போக்கு சர்வாதிகார போக்காக இருப்பதாகக் கூறி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதேபோல, அமைச்சரின் பேச்சுக்கு பதிலளிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதால் டிடிவி தினகரன் சட்டப்பேரவையை புறக்கணித்தார்.

ஜனவரி 09

சபாநாயகர் போக்கு சர்வாதிகார போக்காக இருப்பதாகக் கூறி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதேபோல, அமைச்சரின் பேச்சுக்கு பதிலளிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதால் டிடிவி தினகரன் சட்டப்பேரவையை புறக்கணித்தார். 

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் இன்று நடைபெற்றது. இரண்டாம் நாளான இன்று கேள்வி நேரத்தின்போது ஒக்கி புயல் பாதிப்பு, அரசின் செயல்பாடு, பஸ் தொழிலாளர் போராட்டம் என பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.

அப்போது, அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், தொழிற்சங்கங்கள் தவறான தகவலைப் பரப்பி பேருந்து ஊழியர்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளன. பேச்சுவார்த்தையின்போது, வாட்ஸ் ஆப் மூலம் தவறான தகவல் பரப்பப்பட்டது. இதனை திமுக மற்றும் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் செய்தன. இவ்வாறு அவர் பேசினார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின், பன்னீர்செல்வம் பேச்சு தொழிலாளர்களை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது. இதனை சபை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் எனக்கூறினார். தொடர்ந்து, திமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, ஆளுநர் உரையை விமர்சனம் செய்து திமுக எம்எல்ஏ அன்பழகன் உரைநிகழ்த்தத் தொடங்கினார். ஆனால், அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து, சட்டசபையிலிருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். 

இது தொடர்பாக பேரவைக்கு வெளியே ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகன் பேசும்போது பல நிலைகளில் குறுக்கீடு இருந்தது. ஆளுநர் உரை மீது விவாதம் நடக்கும் நிலையில், ஆளுநர் பற்றியே பேசக்கூடாது என சபாநாயகர் கூறுகிறார். சட்டப்பேரவையில் ஆளுநரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கக் கூடாது என்று தான் விதி உள்ளது. ஆளுநரை பற்றியே பேசக்கூடாது எனக்கூறி அன்பழகன் பேச்சை சபாநாயகர் நீக்கிவிட்டார். சட்டப்பேரவையில், ஆளுநர் சென்னாரெட்டியை ஜெயலலிதா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சபாநாயகர் போக்கு சர்வாதிகார போக்காக உள்ளது. போராட்டத்தை திமுக தூண்டுவதாக ஓபிஎஸ் அபாண்டமாகப் பேசியுள்ளார். இதனை எதிர்த்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

தினகரன் வெளிநடப்பு :-

இதேபோல, கேள்வி நேரத்தில் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் கலந்துகொண்டு பேசினார். பின்னர் அமைச்சர் தங்கமணி பேசும்போது, டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டுகளை கூறினார். தி.மு.க.வுடன் கூட்டு வைத்திருப்பதாகக் கூறியுள்ளார். இதற்கு பதிலளிக்க வாய்ப்பு அளிக்கும்படி டிடிவி தினகரன் கேட்டார். ஆனால், பேசுவதற்கு சபாநாயகர் வாய்ப்பு வழங்கவில்லை. இதையடுத்து, டிடிவி தினகரன் வெளிநடப்பு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், “அமைச்சர் பேச்சுக்கு பதிலளிக்க வாய்ப்பு கேட்டதற்கு சபாநாயகர் அனுமதி வழங்க மறுத்துவிட்டார். இதேபோல, மெஜாரிட்டி அரசு என்று அமைச்சர் கூறியதற்கு பதில் அளிக்க முயன்றபோதும் வாய்ப்பு வழங்க மறுத்துவிட்டார். எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்து பேச முயன்றபோதும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. எனவே வெளிநடப்பு செய்தேன்” என்றார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...