கடைசி மீனவர் கரை திரும்பும் வரை மீட்புப் பணி தொடரும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

கடைசி மீனவர் கரை திரும்பும் வரை மீட்புப் பணி தொடரும் என ஒகி புயல் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

ஜனவரி 9

கடைசி மீனவர் கரை திரும்பும் வரை மீட்புப் பணி தொடரும் என ஒகி புயல் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

ஒகி புயல் குறித்து தமிழக சட்டப் பேரவையில் இன்று கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏ பிரின்ஸ் உள்ளிட்டோரின் கேள்விகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறியதும், வருவாய் நிர்வாக ஆணையர், மாவட்ட ஆட்சியர்கள் மூலம் மீனவர்களுக்குத் தகவல் தரப்பட்டது. 

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநரால், தொலைப்பேசி வாயிலாக முக்கியத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. நவம்பர் 30ம் தேதி தமிழக அரசுக்கு ஒகி புயல் குறித்து தகவல் கிடைத்தவுடன், மாவட்ட நிர்வாகங்கள் மூலம் மாவட்ட மக்களுக்கும், மீனவர்களுக்கும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தென்கடலோர மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை செய்தி விடுக்கப்பட்டது. தொலைத் தொடர்புக் கருவிகள் இல்லாததால் ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்களுக்குத் தகவல் தர முடியவில்லை. அதேபோல, ஆழ்கடலில் தங்கி மீன் பிடிப்பவர்களுக்கும் தகவல் அளிக்க முடியவில்லை. 

ஒகி புயல் பாதித்த பிறகு, மீட்புப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு, பிற மாநிலக் கரைகளில் கரை ஒதுங்கிய 1,174 மீனவர்களுக்கு உணவுப் படியாக ரூ.2,000 வழங்கப்பட்டு அவர்கள் பத்திரமாக தமிழகம் அழைத்து வரப்பட்டனர். காணாமல் போன மீனவர்களைத் தேடிய மீனவர்களுக்குத் தேவையான எரிபொருள் மற்றும் உணவுகளையும் தமிழக அரசு வழங்கியது. பிற மாநில கரைகளில் கரை சேர்ந்தவர்களை அழைத்து வர ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு நியமிக்கப்பட்டது.

அந்த வகையில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று தமிழக மீனவர்களைப் பத்திரமாக அழைத்து வந்தனர். ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கப் பிரதமரிடம் நேரில் வலியுறுத்தினேன். ஒகி புயல் நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு தரப்பில் ரூ.133 கோடி ரூபாய் முதற்கட்டமாக தமிழக அரசுக்கு வழங்கியது. கடைசி மீனவர் கரை திரும்பும் வரை மீட்புப் பணி தொடரும். ஒகி புயலில் சிக்கி மரணம் அடைந்த 20 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...