6-வது நாளாக நீடிக்கும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம்: பொங்கல் சிறப்பு பேருந்துக்கான முன்பதிவு ரத்து, பயணிகள் ஏமாற்றம்

போக்குவரத்து தொழிலாளர்களின் தொடர் வேலைநிறுத்தத்தால், இன்று தொடங்கவிருந்த பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு ரத்து செய்யப்பட்டது.

ஜனவரி 9

போக்குவரத்து தொழிலாளர்களின் தொடர் வேலைநிறுத்தத்தால், இன்று தொடங்கவிருந்த பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு ரத்து செய்யப்பட்டது. இதனால், திட்டமிட்டபடி, பொங்கல் சிறப்பு பேருந்துகள் முழுமையான அளவில் இயக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஓய்வூதியர்களுக்கான நிலுவைத் தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 4-ம் தேதி தொடங்கிய இந்த வேலைநிறுத்தமானது, 6-வது நாளாக நீடித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அரசு தரப்பில் ஊதியத்தை அதிகமாகவே உயர்த்திவிட்டதாக அறிவித்துவிட்டது. இருப்பினும், தொழிற்சங்கங்கள் போராட்டத்தை கைவிடும் மனநிலையில் இல்லை. அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள், தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் உள்ளுர் போக்குவரத்தை சமாளிக்கவே திணறுகின்றனர். மேலும், தற்காலிக ஓட்டுநர்களால் பல்வேறு இடங்களில் விபத்து ஏற்படுவதால், அரசுப் பேருந்தில் ஏறுவதற்கு பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். 

இந்த நிலையில், தைப்பொங்கல் வர உள்ளது. லட்சக்கணக்கானவர்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். நாளை மறுநாள் (11-ந் தேதி) முதல் ஊர்களுக்கு புறப்படுவார்கள். இதற்காக 11 ஆயிரத்து 983 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இன்று தொடங்க இருந்த முன்பதிவு ரத்து செய்யப்பட்டு விட்டது. அதேவேளையில், முன்பதிவுக்கான எந்த ஏற்பாடுகளையும் போக்குவரத்து கழக அதிகாரிகள் செய்யவில்லை. மேலும், 11 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்க ஓட்டுநர்களும், நடத்துநர்களும் நியமிக்க சாத்தியமில்லை. எனவே சிறப்பு பேருந்துகள் முழு அளவில் இயக்குவது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால், பொதுமக்கள் கடுமையான சிரமத்துக்கு உள்ளாவார்கள் எனத் தெரிகிறது. அரசுக்கும்-தொழிற்சங்கங்களுக்கும் இடையே சுமூக உடன்பாடு ஏற்படாமல் நீடித்து வருவதால் அதிகாரிகளும் குழப்பத்தில் உள்ளனர்.

பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்க ஆயத்த பணிகளை செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மிகவும் குறுகிய காலமே இருப்பதால் முன்பதிவு செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியாகும். இன்று மாலைக்குள் பிரச்சினை தீர்க்கப்பட்டால் மட்டுமே பொங்கல் சிறப்பு பேருந்துகளை முறையாக இயக்க முடியும். வேலைநிறுத்தம் முடிவுக்கு வராவிட்டால் அரசு மாற்று ஏற்பாடு செய்வதாக அறிவித்து இருந்தாலும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...