ஜெயலலிதா மரணம் விவகாரம்: விசாரணை ஆணையத்தில் உதவியாளர் பூங்குன்றன் ஆஜர்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு, உதவியாளர் பூங்குன்றன் ஆஜரானார்.

ஜனவரி 9

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு, உதவியாளர் பூங்குன்றன் ஆஜரானார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் உறவினர்கள், அரசு மருத்துவர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவின் உறவினரும், மருத்துவருமான சிவகுமார், உதவியாளர் பூங்குன்றன், தனி பாதுகாவல் அதிகாரி பெருமாள்சாமி ஆகியோருக்கு விசாரணை ஆணையம் கடந்த வாரம் அழைப்பாணை அனுப்பியிருந்தது.

ஜெயலலிதா கிசிச்சை தொடர்பான ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு சசிகலா, சட்டப்பேரவை உறுப்பினர் டிடிவி தினகரன், அவரது ஆதரவாளர் வெற்றிவேல், அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டி, அவரது மகளும், அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் துணைத் தலைவருமான பிரீத்தா ரெட்டி ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் 5 விடியோக்களை ஆணையத்திடம் தினகரனும், வெற்றிவேலும் சமர்ப்பித்துள்ளனர்.

ஜெயலலிதாவுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் சிவக்குமார் நேற்று ஆஜரான நிலையில், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் இன்று ஆஜரானார். ஏற்கனவே, ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் தோட்ட இல்லத்தில் வேலை பார்த்து வந்த 12 பேர்களின் முழு விவரத்தையும் விசாரணை ஆணையத்தில் பூங்குன்றன் வழங்கியிருந்தார். மேலும் சில தகவல்களை விசாரணை ஆணையம் கேட்டிருந்த நிலையில், ஜெயலலிதாவின் உதவியாளராக பல ஆண்டுகள் பணியாற்றி வந்த பூங்குன்றன், விசாரணை ஆணையம் முன்பு இன்று நேரில் ஆஜரானார்.

ஜெயலலிதாவுக்கு நீண்ட காலமாக தனி பாதுகாவல் அதிகாரியாக இருந்த பெருமாள்சாமியை நாளையும், முன்னாள் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனை நாளை மறுநாளும், இதய நோய் சிகிச்சை மருத்துவர் சாமிநாதன் 12-ஆம் தேதியும் ஆஜராக உள்ளனர். அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் சத்யபாமாவுக்கு அண்மையில் அழைப்பாணை அனுப்பப்பட்டது. இதையடுத்து, அவர் கடந்த வாரம் ஆஜரானார். அவரிடம் காலை 10.30 மணி முதல் 1 மணி வரை விசாரணை நடைபெற்றது. அவரிடம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, மருத்துவர்களின் விவரங்கள் குறித்துக் கேட்கப்பட்டன.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...