தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 12-ம் தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் அறிவிப்பு

ஜனவரி 08,

ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 12-ம் தேதிவரை நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம், கரும்பு விவசாயிகள் பிரச்சனை உள்ளிட்ட பரபரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அவரது உரையில், பெண்கள் இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கான மானிய உச்சவரம்பு உயர்வு, கச்சத்தீவு மீட்பு, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. 

ஆளுநர் உரை முடிந்ததும் இன்றைய கூட்டம் முடிந்தது. இதையடுத்து, சபாநாயகர் தனபால் தலைமையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.  

அப்போது, ஆளுநர் உரை மீது முதலமைச்சர் நன்றி தெரிவித்து பேசும் தினத்தில், எதிர்க்கட்சி தலைவரும் பேச அனுமதிக்க வேண்டும் என்று தி.மு.க. கோரிக்கை வைத்தது. இந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதையடுத்து, அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தை தி.மு.க. புறக்கணித்து வெளிநடப்பு செய்தது. பின்னர், தொடர்ந்து நடந்த ஆலோசனையில் கூட்டத்தொடரை 12-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து சபாநாயகர் தனபால் கூறியதாவது: சட்டப்பேரவை கூட்டத் தொடரை 12-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை (9-ம் தேதி) முதல் வியாழன் (11-ம் தேதி) வரை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து, 12-ம் தேதி முதலமைச்சர் உரை நிகழ்த்துவார். இவ்வாறு அவர் கூறினார்

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...