பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கான மானியம் ரூ. 25,000-மாக உயர்வு: சட்டப்பேரவையில் ஆளுநர் அறிவிப்பு

ஜனவரி 8

பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கான மானியம் ரூ. 20 ஆயிரத்தில் இருந்து ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படுமென சட்டப்பேரவையில் நிகழ்த்திய தனது உரையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். 

2018-ம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் என்பதால், இந்தக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அவரது உரையின் à®®à¯à®´à¯ விவரம் வருமாறு : அனைவருக்கும் வணக்கம்..! புத்தாண்டு வாழ்த்துக்கள்..! மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காட்டிய வழியில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்கள் நலத்திட்டங்கள் நல்ல முறையில் இடைவிடாது செயல்படுத்தப்படுகின்றன. ஹார்வர்டு பல்கலை.,யில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.10 கோடி வழங்கிய முதலமைச்சர் பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். 

நாடு முழுவதும் அமலான ஜி.எஸ்.டி., நடைமுறையை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதற்குப் பாராட்டு தெரிவிக்கிறேன். ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை மீட்பதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது. குமரி மாவட்டத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். மீனவர்களை மீட்க மத்திய அரசு, தமிழக அரசு இணைந்து செயல்பட்டன. 4 தொழில் பூங்கா துவக்கப்படும். கடுமையான நிதி நெருக்கடியிலும் தமிழக அரசு ஏழாவது ஆணையத்தைப் பரிந்துரைத்துள்ளது. நலத்திட்ட நிதியும் வழங்கப்படுகிறது. உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் 96,314 பேருக்கு 61 திட்டங்கள் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி காத்திட தமிழக அரசு பணியாற்றி வருகிறது. ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய பேரிடர் நிதியில் இருந்து ரூ. 133 கோடியை முன்பணமாக வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதி நீர் முறைப்படுத்தும் குழுவை விரைவில் அமைக்க வேண்டும். மின்பற்றாக்குறை மாநிலமாக இருந்த தமிழகம் ஜெயலலிதா நடவடிக்கையால் மின்மிகை மாநிலமாக மாறியது.

கோதாவரி உபரி நீரை தமிழகத்திற்கு திருப்பி அனுப்ப உதவிய மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு நன்றி. 16 மாவட்டங்கள் திறந்தவெளி கழிப்பிடம் முழு அளவில் இல்லாததாக மாற்றப்படும். இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டு வளர்ச்சி திறன் மையங்கள் அமைக்கப்படும்.

தூய்மை இந்தியா என்ற தேசிய கொள்கை முழு அளவில் செயல்படுத்தப்படும். பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்குவதற்கான மானியம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ 25 ஆயிரமாக உயர்த்தப்படும். அம்மா மகப்பேறு சஞ்சீவினி திட்டம், அம்மா உணவகம் உள்ளிட்ட அம்மா திட்டங்கள் தொடர்ந்து செயல்படும்.

ஜப்பான் மற்றும் உலக வங்கி நிதியுடன் 4 தொழில் பூங்கா துவக்க நடவடிக்கை எடுக்கப்படும். கலப்பு பண்ணை முறையை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். அரசு கல்லூரி உள் கட்டமைப்பு மேம்படுத்த ரூ. 210 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஆதி திராவிடர், பழங்குடி இன மக்கள் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு வணிக எளிதாக்கும் சட்டம் விரைவில் வரும். கிழக்கு கடற்கரை சாலை மேம்பாட்டுக்கு அனுமதி வழங்கப்படும். 2030க்குள் தமிழகத்தில் நிலைக்கத்தக்க வளர்ச்சி. ஜெயலலிதா வகுத்த பாதையில் அரசு தொடர்ந்து செல்லும். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். எனக் கூறி ஆளுநர் உரையை நிறைவு செய்தார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...