ஆளுநர் உரையுடன் தொடங்கியது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்: திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு

ஜனவரி 8

2018-ம் ஆண்டில் சட்டப்பேரவையின் முதல்கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உரையுடன் தொடங்கியது. ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் அவையை வெளிநடப்பு செய்தனர். 

தமிழக சட்டப்பேரவையின் 2018-ம் ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் இன்று துவங்கியது. தலைமைச் செயலக வளாகத்திற்கு வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, சபாநாயகர் ப.தனபால், சட்டப்பேரவை செயலாளர் பூபதி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 

சட்டப்பேரவைக்குள் ஆளுநருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சபாநாயகர் இருக்கைக்கு வந்த ஆளுநர், சபாநாயகர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், உறுப்பினர்களைப் பார்த்து வணக்கம் கூறினார். அதன்பிறகு, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. 10 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையைத் துவங்கினார். வணக்கம், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என தமிழில் கூறி தனது உரையைத் துவங்கினார். அதைத்தொடர்ந்து, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்களை நோக்கி, விவாதத்தின் போது உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என கூறிய ஆளுநர், தமிழில் உட்காருங்கள் என எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார். 

இருப்பினும், ஆளுநரைப் பேசவிடாமல் அவையில் கூச்சல், குழப்பத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். 

முதன்முறையாக சட்டப்பேரவையில் தினகரன்:

இதனிடையே, ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.டி.வி. தினகரன், முதன் முதலாக சட்டப்பேரவைக் கூட்டத்துக்கு பங்கேற்க வந்தார். அவரை எம்.எல்.ஏ.பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள 18 பேரும் வரவேற்றனர். பிறகு, தினகரன் சட்டப்பேரவைக்குள் சென்றார். அவரை அவரது ஆதரவாளர்களான எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி ஆகிய இருவரும் அழைத்துச் சென்றனர். அப்போது, அவரை தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கே.என்.நேரு, ரகுபதி, பன்னீர்செல்வம், ஜெ.அன்பழகன் ஆகிய 4 பேரும் டி.டி.வி.தினகரனுக்கு கைகுலுக்கி வாழ்த்துகளை தெரிவித்தனர். மற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தினகரனை பார்த்து கும்பிட்டு வணக்கம் தெரிவித்தனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, விஜயதாரணி இருவரும் டி.டி.வி.தினகரனுக்கு வாழ்த்து கூறினார்கள். அதன்பிறகு டி.டி.வி.தினகரன் தனக்கு ஒதுக்கப்பட்ட 148-ம் எண் இருக்கைக்கு சென்றார். அந்த இருக்கையில் கடந்த கூட்டத் தொடர் வரை வெற்றிவேல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த இருக்கையில் டி.டி.வி.தினகரனை எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி இருவரும் அமர வைத்தனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...