கால்நடை ஊழல் வழக்கு : லாலுவுக்கு 3.5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஜனவரி 06

கால்நடை தீவன ஊழல் வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தால், குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு 3.5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்க்கப்பட்டுள்ளது.

பீகாரில் 1994 - 1996 -ம் ஆண்டு வரை ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் முதலமைச்சராக இருந்த போது, கால்நடை தீவனம் வாங்கியதில் பல கோடி ரூபாய் மோசடி நடந்ததாக சி.பி.ஐ. வழக்குகளைப் பதிவு செய்தது. இது தொடர்பான வழக்குகள் ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. அதில், ஒரு வழக்கில் லாலுவுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து 2013ல் தீர்ப்பளிக்கப்பட்டது. 

கால்நடை தீவனம் தொடர்பான மற்ற வழக்குகளையும் லாலு சந்திக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பீகாரின், தியோகர் மாவட்ட கருவூலத்தில் 89.27 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், லாலு மற்றும் 15 பேரைக் குற்றவாளி என அறிவித்து சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவ்பால் சிங் சமீபத்தில் தீர்ப்பளித்தார்.

தண்டனை விபரம் தொடர்பாக நேற்று முன்தினம் நடந்த விசாரணையில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ள 16 பேரில், நான்கு பேர் தொடர்பான விசாரணை மட்டும் முடிந்ததால் நேற்றைக்குத் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், லாலு உள்ளிட்டோரிடம் விசாரணை நடந்து முடிந்தது. அதையடுத்து, இந்த வழக்கில், இன்று தண்டனை விபரம் அறிவிக்கப்படும் என சிறப்பு நீதிமன்றம் கூறியிருந்தது.

அதன்படி, குற்றவாளிகளுக்கான தண்டனையை நீதிபதி வீடியோ கான்பரன்சிங் மூலம் அறிவித்தார். அதில், லாலு பிரசாத் யாதவுக்கு 3.5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட பூல் சந்த், மகேஷ் பிரசாத், பேக் ஜூலியஸ், சுனில்குமார், சுசில்குமார், சுதிர்குமார் மற்றும் ராஜா ராமுக்கு 3.5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...