வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நோட்டீஸ்

ஜனவரி 06

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, பணிக்கு வராத போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

அரசு போக்குவரத்து கழகங்களில் சுமார் 1.5 லட்சம் ஊழியர்கள்  பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும், ஓய்வூதிய நிலுவை தொகைகளை தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளனர். அரசு பேருந்து ஊழியர்கள் தங்களது சம்பள உயர்வு 2.57 மடங்காக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். ஆனால், அரசு தரப்பில் 2.44 மடங்கு ஊதியம் தர சம்மதிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் நேற்று முன் தினம் முதல் பேருந்துகளை இயக்கவில்லை.

தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக சுமார் 90 சதவீத பேருந்துகள் ஓடவில்லை. இதனால், லட்சக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இந்த நிலையில், அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் பேருந்து வேலைநிறுத்தம் இன்று 3-வது நாளாக நீடித்தது.

இதனால், பொதுமக்கள் தங்களது அன்றாட பணி நிமித்தமாக வெளியில் செல்வது கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நீண்ட தூர பேருந்துகள் செல்லாததால் சனி, ஞாயிறு விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்குச் செல்பவர்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள். 

இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதித்தும், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பணிக்குத் திரும்பாதவர்கள் மீது பணி நீக்கம், நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தது.

இதையடுத்து, தமிழக அரசும், போக்குவரத்து தொழிலாளர்களை பணிக்குத் திரும்பும்படி கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், அரசு மற்றும் நீதிமன்றத்தின் கோரிக்கைகளை ஏற்க அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மறுத்துவிட்டன.

பணிக்கு வராத தொழிலாளர்களுக்கு போக்குவரத்துத்துறை நோட்டீஸ் அனுப்பியது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி, பணிக்கு வராத தொழிலாளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் எனத் தொழிலாளர்களுக்கு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...