ரஜினி ரசிகர் மன்றம், மக்கள் மன்றமாக பெயர் மாற்றம்

ஜனவரி 06

ரஜினிகாந்த் ரசிகர்களை ஒருங்கிணைத்து ஆரம்பிக்கப்பட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்றம், தற்போது மக்கள் மன்றம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31-ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அவரது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை ரசிகர்கள் முன்பு அறிவித்தார். ஆன்மீக அரசியலில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தார். 

ரஜினி தொடங்க உள்ள புதிய கட்சியின் பெயர், கொடி உள்ளிட்டவற்றை உருவாக்கும் பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. தான் தொடங்க இருக்கும் கட்சியில் சேர நினைப்பவர்கள், மாற்றத்தை விரும்புபவர்கள் தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்த ரஜினி, அதற்காக புதிய இணையதள முகவரி ஒன்றையும் அறிமுகப்படுத்தினார்.

அந்த இணையதளம் மூலமாக ரஜினி மன்றத்தில் இதுவரையில் 50 லட்சம் பேர் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழகம் முழுவதும் 22 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட ரஜினி மன்றங்கள் உள்ளன. 30 ஆயிரம் மன்றங்கள் பதிவு செய்யப்படாமல் உள்ளன. இந்நிலையில், ரஜினியின் `அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்' தற்போது `ரஜினி மக்கள் மன்றம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...