போராட்டத்தைத் தொடர்ந்தால், நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது : போக்குவரத்துத் துறை அமைச்சர் எச்சரிக்கை

ஜனவரி 05

போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால். நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தலைமைச்செயலகத்தில் அவர் செய்தியார்களிடம் கூறியதாவது:  பொதுமக்கள், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், சேவை மனப்பான்மையுடனும் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். ஊழியர்கள் அனைவரும் அமைதியான முறையில் பணிக்கு திரும்ப வேண்டும். சில தொழிற்சங்கங்கள் வேண்டுமென்றே வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. 

போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் 23 முறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. போக்குவரத்து கழக தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலித்து வருகிறது. முதலமைச்சரின் ஒப்புதல் பெற்றே ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது. போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும். சில தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்ததால், பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டது. இவ்வாறு கூறினார். 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...