ஜெயலலிதா மரணம் விவகாரம் : ஷீலா பாலகிருஷ்ணனுக்கு விசாரணை ஆணையம் மீண்டும் சம்மன்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அரசின் முன்னாள் சிறப்பு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணனுக்கு விசாரணை நடத்தி வரும் ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.

ஜனவரி 05

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அரசின் முன்னாள் சிறப்பு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணனுக்கு விசாரணை நடத்தி வரும் ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.

முன்னாள் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம், தனது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. சேப்பாக்கத்தில் உள்ள கலசமகாலில் செயல்பட்டு வரும் அந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலிதாவின் உறவினர்கள், அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணை ஆணையத்தின் சம்மனை ஏற்று, தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளரும், முன்னாள் சிறப்பு ஆலோசகருமான ஷீலா பாலகிருஷ்ணன், கடந்த டிசம்பர் மாதம் 20-ந்தேதி நேரில் ஆஜரானார். அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு, விளக்கத்தைப் பதிவு செய்துகொண்டார்.

இந்நிலையில் விசாரணை ஆணையம் ஷீலா பாலகிருஷ்ணனுக்கு தற்போது மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. அவரிடம் மேலும் விளக்கங்கள் பெற வேண்டியிருப்பதால், வரும் 11-ம் தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜராகும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...