ஆஷஸ் கடைசி டெஸ்ட் : ரூட்-டின் சிறப்பான ஆட்டத்தால் நிமிர்ந்தது இங்கிலாந்து

ஜனவரி 04

ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டியில் இங்கிலாந்து அணி துவக்க விக்கெட்டுகளை இழந்தபோதும், கேப்டன் ஜோ ரூட்டின் பொறுப்பான ஆட்டத்தினால் சரிவில் இருந்து மீண்டது.

ஆஸ்திரேலியா -இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் 4 போட்டிகள் முடிந்துள்ளன. இதில் 3-0 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று சிட்னியில் தொடங்கியது. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் ஸ்டோன்மேன் 24 ரன்னிலும், பின்சி 25 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

மற்றொரு தொடக்க விரர் அலிஸ்டயர் கூக் இன்னும் 47 ரன் எடுத்தால் 12 ஆயிரம் ரன் கடப்பார் என்ற நிலையில் விளையாடினார். ஆனால் அவர் 39 ரன்னில் ஆவுட் ஆனார். அப்போது ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 95 ரன்னாக இருந்தது. அதன்பின்னர் ஜோ ரூட்டுடன், மலன் இணைந்தார். இருவரும் நிதானமாக விளையாடியதுடன் மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். தேநீர் இடைவேளைக்குப் பிறகு ரூட் அரை சதம் கடந்தார். மலனும் அரை சதத்தை நெருங்கினார். இவர்கள் இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். அணியின் ஸ்கோரும் 200 ரன்னைத் தாண்டியது.

இருவரும் சிறப்பாக ஆடிய நிலையில், சதம் அடிப்பார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரூட் 83 ரன்னில் ஸ்டார்க் பந்தில் அவுட்டானர். இதைத்தொடர்ந்து, மாலனுடன் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார். 5 ரன்னில் பேர்ஸ்டோவ் அவுட்டான நிலையில், முதல்நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்திருந்தது. மாலன் 55 ரன்னுடன் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஹசில்வுட், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டும், ஸ்டார்க் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...