ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் மீண்டும் வருமான வரித்துறை ஆய்வு

ஜனவரி 04

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்தனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் அவரது உறவினர் டிடிவி தினகரன் ஆகியோருக்குச் சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திலும் சோதனை நடைபெற்றது. இது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது, சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் மூன்று அறைகளை சீல் வைத்துச் சென்றனர். 

இந்நிலையில், ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று மீண்டும் ஆய்வு செய்தனர். முன்பு சீல் வைக்கப்பட்ட அறைகளில் தற்போது ஆவணங்களை அவர்கள் பறிமுதல் செய்வதற்காக மீண்டும் சோதனை செய்ததாகக் கூறப்படுகிறது. ஜெயா தொலைக்காட்சியின் பழைய அலுவலகத்திலும் சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், போயஸ் கார்டன் சோதனைகள் பரபரப்பினைக் கூட்டியுள்ளன.  

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...