இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்

ஜனவரி 04

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 84 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கும்போது, எல்லை தாண்டி வந்ததாகக் கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெறுகிறது. நல்லெண்ண அடிப்படையில் மீனவர்களை விடுதலை செய்கின்றனர். ஆனால், படகுகள் விடுவிக்கப்படுவதில்லை. இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இன்று காலை மீன்பிடிக்கச் சென்ற 13 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: இன்று காலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்கள் உள்பட இலங்கை சிறைகளில் உள்ள 84 மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான 159 மீன்பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களை அனுமதிக்க வேண்டும்.

எனவே, இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்கள், அவர்களது படகுகளை தாமதமின்றி விடுவிக்கத் தேவையான நடவடிக்கையை இலங்கை அரசுடன் பேசி மேற்கொள்ளும்படி, வெளியுறவுத் துறைக்கு தாங்கள் அறிவுறுத்த வேண்டும். எனக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், இலங்கை அரசால் சமீபத்தில் 79 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...