தனுஷை தொடர்ந்து முன்னாள் உலக அழகியை சோதிக்கும் வாரிசு பிரச்சனை

திரையுலகைச் சேர்ந்த தனுஷ் எனது மகன் என ஒரு தம்பதியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உரிமை கொண்டாடி வரும் நிலையில், முன்னாள் உலக அழகிக்கும் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜனவரி 4

திரையுலகைச் சேர்ந்த தனுஷ் எனது மகன் என ஒரு தம்பதியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உரிமை கொண்டாடி வரும் நிலையில், முன்னாள் உலக அழகிக்கும் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சங்கீத்குமார் என்பவர் 1988-ம் ஆண்டு லண்டனில் செயற்கை கருத்தரிப்பின் முறையில் பாலிவுட் நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய்க்கு பிறந்தவர் என்று கூறியுள்ளார். தன்னை 3-வயது வரை ஐஸ்வர்யா ராயின் பெற்றோர்களான கிருஷ்ணராஜ் ராய் மற்றும் பிரிந்தியா ராய் அவர்கள் வளர்த்ததாகவும் பின்னர் மும்பையில் இருந்து ஆந்திராவிற்குத் தனது வளர்ப்புத் தந்தை ஆதித்தியா ராய் அழைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். தனது தாத்தா கிருஷ்ணராஜ் ராய் ஏப்ரல் 2017-ல் இறந்ததாகவும் அவர் கூறி இருக்கிறார்.

“நான் என் அம்மாவைச் சந்திக்க கூடது என்று 27 வருடங்களாக என் உறவினர்கள் என்னைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தனர், மேலும் நான் ஐஸ்வர்யாவின் மகன் என்பதற்கான ஆதாரங்களையும் அவர்கள் அழித்து விட்டார்கள். இப்போது என் தாய் தனது கணவன் அபிஷேக்பச்சனை பிரிந்து தனியாக வாழ்கிறார். தனிமையில் வாடும் என் அம்மாவிற்கு ஆதரவாக இருக்கவே நான் விரும்புகிறேன்” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

அவர் சொல்வதை எல்லாம் உண்மை என்று வைத்துக் கொண்டால், 1988-ம் ஆண்டில் ஐஸ்வர்யாவின் வயது 15 மட்டுமே, அப்படிப் பார்த்தால் 14-வயதிலேயே அவர் கர்ப்பம் அடைந்திருக்க வேண்டும். மேலும், அவர் தனது கணவர் அபிஷேக்பச்சனுடன் இணைந்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதே உண்மை. இந்த இளைஞர் ஒருவேளை அவரது தீவிர ரசிகராக இருக்கலாம் இப்படி ஏதாவது செய்தால் ஐஸ்வர்யா ராயை சந்திக்க முடியும் என்கிற நம்பிக்கையில் இந்தச் செய்தியை பரவ விட்டிருக்கலாம் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...