கருணாநிதியைத் தொடர்ந்து ஆர்.எம்.வீரப்பனுடன் நடிகர் ரஜினி சந்திப்பு

கருணாநிதியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பனை இன்று சந்தித்துப் பேசினார்.

ஜனவரி 04:

கருணாநிதியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பனை இன்று சந்தித்துப் பேசினார். 

கடந்த டிசம்பர் 31-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாகவும், தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்திருந்தார். மேலும், தான் செய்யப்போவது ஆன்மீக அரசியல் என்றும், அதில் உண்மை, நேர்மையைப் பின்பற்ற உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

இதைத்தொடர்ந்து, அரசியலில் ஈடுபடுவதற்கான பணிகளில் அவர் ஈடுபட்டு வரும் நிலையில், முக்கியத் தலைவர்களையும் சந்தித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பனை இன்று சந்தித்துப் பேசினார். சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ரஜினி நேற்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசிபெற்ற நிலையில் இன்று ஆர்.எம்.வீரப்பனை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...