ஜெயலலிதா மரண விவகாரம்: மேலும் 5 பேர் ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன்

ஜனவரி 4

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவரது உதவியாளர், பாதுகாவலர், குடும்பநல மருத்துவர் உள்ளிட்ட மேலும் 5 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் இன்று அப்பலோ மருத்துவமனை நிர்வாக பிரிவு மருத்துவர் சத்யபாமா ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், வரும் 8ம் தேதி ஜெயலலிதா குடும்ப மருத்துவர் சிவக்குமார், 9ம் தேதி ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. 10ம் தேதி ஜெயலலிதாவின் பாதுகாவலர் பெருமாள்சாமி, 11ம் தேதி மருத்துவர் பாலாஜி, 12ம் தேதி இதயநோய் சிகிச்சை மருத்துவர் சாமிநாதன் ஆகியோர் ஆஜராகவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...