பொங்கல் பண்டிகையொட்டி சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

ஜனவரி 03

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் 11,983 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அமைச்சர்  எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். 

பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து சென்னை பல்லவன் இல்லத்தில் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- பொங்கல் பண்டிகைக்கு 11,983 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 11, 12, 13ம் தேதிகளில் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதற்காக முன்பதிவு செய்ய 29 சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்படும். ஜனவரி 9-ம் தேதி முதல் 13ம் தேதி முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்யப்படும். இந்த முறை 6 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பண்டிகை முடிந்து மக்கள் திரும்பி வரச் சென்னைக்கு 3,000 பேருந்துகளும், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு 10 ஆயிரம் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். சென்னையில் கோயம்பேடு அல்லாது ஐந்து தற்காலிக பேருந்து நிலையங்கள் செயல்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார். 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...