ஜெயலலிதாவின் சிகிச்சை ஆவணங்களை தாக்கல் செய்ய அப்பல்லோவுக்கு காலஅவகாசம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வரும் 12-ம் தேதி வரை அப்பல்லோவுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனவரி 03:

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வரும் 12-ம் தேதி வரை அப்பல்லோவுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் கலச மஹால் கட்டிடத்தில் விசாரணை ஆணையம் செயல்பட்டு வருகிறது. இதனிடையே, விசாரணை ஆணையத்தில் ஆஜராவதற்கு அப்பல்லோ நிர்வாகம் 2 வார காலஅவகாசம் கோரியிருந்தது.

இதனை ஏற்ற விசாரணை ஆணையம் அப்பல்லோ நிர்வாகத்துக்கு ஜனவரி 12ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது. சிகிச்சை தொடர்பான ஆவணங்களை அளிக்க அப்பல்லோ நிர்வாகத்துக்கு ஜனவரி 12-ம் தேதி வரை அவகாசம் வழங்கி விசாரணை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், குடும்ப மருத்துவர் சிவக்குமார் இருவரும், அடுத்த வாரம் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பத் திட்டமிடப்பட்டு உள்ளது.

முன்னதாக, இன்று விசாரணை ஆணையத்தின் முன் மருத்துவர் சுதா சேஷய்யன் ஆஜராகி விளக்கமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அவர் பேட்டி அளிக்கும் போது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எம்பால்மிங் செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளித்தேன். எனக் கூறினார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...