12 அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் நியமனம் செய்து இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். அறிவிப்பு

ஜனவரி 3

அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தெடார்பாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சசிகலா அணியில் இருந்து வந்த மருது அழகுராஜுக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அதிமுகவின் கொள்கைகளையும், குறிக்கோள்களையும், கோட்பாடுகளையும், நிலைப்பாடுகளையும் நாளிதழ், வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து சமூகத் தொடர்பு ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் அதிமுக செய்தித் தொடர்பாளர்களாக கீழ்க்கண்டவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

1.சி.பொன்னையன் (முன்னாள் அமைச்சர்)

2. பா.வளர்மதி ( கழக இலக்கிய அணி செயலாளர், தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவர்)

3. எஸ்.கோகுல இந்திரா (முன்னாள் அமைச்சர்)

4. வைகைச்செல்வன் (முன்னாள் அமைச்சர்)

5. ஜே.சி.டி.பிரபாகர், (கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச்செயலாளர்)

6. கோ.சமரசம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கிருஷ்ணகிரி மாவட்டம்)

7. ம.அழகுராஜ் (எ) மருது அழகுராஜ்

8. கோவை செல்வராஜ் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கோவை மாநகர் மாவட்டம்)

9. பேராசிரியர் தீரன் (எ) ஏ.ராஜேந்திரன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், விழுப்புரம் வடக்கு மாவட்டம்)

10. கே.சி.பழனிச்சாமி (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், கோவை மாவட்டம்)

11. ஏ.எஸ்.மகேஸ்வரி (கோவை மேற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கோவை மாநகர் மாவட்டம்)

12. ஆர்.எம்.பாபு முருகவேல் (ஆரணி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்)

மேற்கண்ட செய்தித் தொடர்பாளர்களைத் தவிர வேறு யாரும் அதிமுக சார்பில் நாளிதழ், வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து சமூகத் தொடர்பு ஊடகங்களில் கலந்துகொண்டு பேசுவதற்கு தலைமைக் கழகத்தின் அனுமதி இல்லை என்பதையும், தோழமைக் கட்சிகளில் இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் ஒய்.ஜவகர் அலி மட்டுமே ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களில் கலந்துகொள்வர் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...