ஜெயலலிதா சிகிச்சை வீடியோ விசாரணை ஆணையத்தில் ஒப்படைப்பு

ஜனவரி 3

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான முழு வீடியோ ஆதாரங்களை டிடிவி. தினகரன் விசாரணை ஆணையத்தில் ஒப்படைத்தார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசால் விசாரணை ஆணையம்அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 20ம் தேதி டிடிவி. தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஜெயலலிதா டிவி பார்த்துக்கொண்டே பழச்சாறு குடிப்பது போன்ற 20 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோவை ஒப்படைக்குமாறு விசாரணை ஆணையத்தில் இருந்து வெற்றிவேலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதை தொடர்ந்து, கடந்த 25ம் தேதி வெற்றிவேல் தரப்பு வழக்கறிஞர்கள் வீடியோவை ஒப்படைத்தனர். 

இதனிடையே, கடந்த 22ம் தேதி, ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஆதாரங்கள் இருந்தால் ஒப்படைக்குமாறு சசிகலா, அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, அவர் மகள் பிரீத்தா ரெட்டிக்கு ஆணையம் சம்மன் அனுப்பியது. அதேபோன்று, கடந்த 26ம் தேதி ஜெயலலிதா வீடியோ ஆதாரங்கள் இருந்தால் 7 நாட்களுக்குள் ஒப்படைக்குமாறு டிடிவி.தினகரனுக்கு சம்மன் அனுப்பியது. அவருக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், ஜெயலலிதா குறித்த வீடியோ ஆதாரங்களை பென் டிரைவில் பதிவு செய்து நீதிபதி ஆறுமுகசாமியிடம் ஒப்படைத்தார். 

பின்னர் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டி நிருபர்களிடம் கூறியதாவது: ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் இருந்து கடந்த 28ம் தேதி டிடிவி.தினகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஜெயலலிதா குறித்த வீடியோ ஆதாரங்கள் இருந்தால் 7 நாட்களுக்குள் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் நேரில் ஆஜராகி பென் டிரைவ் ஒன்றை நீதிபதியிடம் ஒப்படைத்துள்ளேன். அந்த பென் டிரைவில் உள்ள வீடியோவை நீதிபதி பார்த்தார். அதில் இருக்கிற பதிவுகளை அவர் குறிப்பு எடுத்துக்கொண்டார். ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் உயிரோடு இருந்தார். 

அவர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார் என்பதை வெளிப்படுத்தக் கூடிய வீடியோ பதிவு இருந்ததை தாக்கல் செய்துள்ளோம். வெற்றிவேல் தாக்கல் செய்த வீடியோவை தவிர மற்ற வீடியோக்களை ஒப்படைத்து இருக்கிறோம். என்றார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...