அரசியலில் பிரவேசிக்க இருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு விபரம்

ஜனவரி 02 

அரசியல் களத்தில் குதிக்கும் நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் சம்பாதித்த சொத்து மதிப்பு குறித்த தகவலை பின்ஆப் (finapp) வெளியிட்டு உள்ளது. 

ரஜினிகாந்த் கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்தார். இந்த தகவல் வெளியானவுடன், தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வரவேற்பு தெரிவித்தனர். உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் நடிகர் ரஜினியின் அரசியல் வருகை  குறித்து அரசியல் தலைவர்கள் பெரிய அளவில் பேசி வருகின்றனர். ரஜினியின் அரசியல் வருகையை பாஜக தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் அதிகப்படியான ஆதரவு அளித்து வருகின்றனர். ரஜினி எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவார்கள் என்ற கேள்வி மேலேழுந்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் ரஜினிகாந்தின் வருவாயில் குறிப்பிட்ட அளவிலான பங்குகள் தொண்டு நிறுவனங்களுக்குச் செல்வதாகக் கூறப்படும் நிலையில், தற்போதைய சொத்து மதிப்பு ரூ. 360 கோடி என்று பின்ஆப் வெளியிட்டுள்ளது. ரஜினியின் சொத்து மதிப்பு என்பது திரைப்படத்தில் இருந்து வரும் ஊதியம், வீடு மற்றும் தனிப்பட்ட முதலீடுகள் போன்றவற்றினை வைத்துக் கணக்கிடப்பட்டதாக பின்ஆப் தெரிவித்துள்ளது.

சராசரியாகத் திரைப்படத்தில் இருந்து கிடைக்கும் வருவாய் ரூ. 55 கோடி எனவும், முதலீடுகள் மூலமாக 110 கோடி ரூபாய், ரேன்ஞ் ரோவர், பெண்ட்லி, மற்றும் டொயோட்டா இன்னோவா என்ற 3 ஆடம்பர கார்கள் மட்டுமே ரஜினியிடம் உள்ளது. இதன்மதிப்பு ரூ.2.5 கோடி, ஆண்டுக்கு வருமான வரி 13 கோடி என இவரது சொத்துக்கள் மதிப்பிடப்பட்டுள்ளது. ரஜினி சென்னை போயஸ் தோட்ட வீட்டை 2002-ஆம் ஆண்டு வாங்கியுள்ளார். இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ.35 கோடியாகும். 

ரஜினிகாந்த் விளம்பரங்களில் நடிப்பதில்லை என்பதும் ரஜினிகாந்த் தான் நடித்த படம் சரியாக வசூலிக்கவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு குறிப்பிட்ட அளவிலான பணத்தினைத் திரும்பவும் அளிப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...