தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கலைச்செல்வன் உள்பட 9 பேரின் கட்சிப் பதவிகள் பறிப்பு

ஜனவரி 2

எம்எல்ஏ டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான கலைச்செல்வன், ஜெயந்தி பத்மநாபன் உள்பட 9 பேரின் கட்சி பொறுப்புகளைப் பறித்து அதிமுக அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் ஆதரவாளர்களை நீக்கும் பணியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தர்மபுரி, புதுக்கோட்டை, திருப்பூர் மாவட்ட தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 150-க்கும் மேற்ட்டவர்கள் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர். நீக்கப்பட்டவர்களுடன் அதிமுகவினர் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிவித்துள்ளனர்.

இதுவரை 200-க்கும் மேற்பட்ட தினகரன் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தற்போது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 9 பேர், கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கோதண்டபாணி, ஜெயந்தி பத்மநாபன், கலைச்செல்வன், கதிர்காமு, எஸ்.ஜி.சுப்பிரமணியன், மாரியப்பன், கென்னடி, எஸ்.முத்தையா, ஆர்.சுந்தரராஜ் ஆகிய 9 பேர் அதிமுக பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...