ஜெயலலிதா மரண விவகாரம்: விசாரணை ஆணையம் முன்பு இளவரசி மகள் கிருஷ்ணபிரியா ஆஜர்

ஜனவரி 2

ஜெயலலிதா மரணம் பற்றிய நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையம் முன்பு, இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தைத் தமிழக அரசு நியமித்தது. இந்த விசாரணை ஆணையத்தில் அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள், தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், ராம்மோகனராவ் உள்ளிட்டவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, டிடிவி தினகரன், இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா, ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் ஆகியோருக்கு நேரில் ஆஜராகும்படி விசாரணையின் ஆணையம் சம்மன் அனுப்பியது. அதனடிப்படையில், இளவரசி மகள் கிருஷ்ணபிரியா இன்று சென்னை சேப்பாக்கம் கலச மகாலில், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன்பு ஆஜரானார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...