நேர்மையான வழியில் லட்சியத்தை அடைய வேண்டும்: ரசிகர்கள் சந்திப்பில் ரஜினிகாந்த் பேச்சு

நேர்மையான வழியில் நமது லட்சியங்களை அடைய வேண்டும் என்றும் குறுக்கு வழியில் செல்லக் கூடாது.

டிசம்பர் 30 

நேர்மையான வழியில் நமது லட்சியங்களை அடைய வேண்டும் என்றும் குறுக்கு வழியில் செல்லக் கூடாது என்றும் ரசிகர்கள் சந்திப்பின்போது நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்தார். 5-வது நாளாக இன்றும் ரசிகர்களுடனான சந்திப்பு தொடர்ந்து நடைபெறுகிறது. இன்றைய சந்திப்பின்போது ரசிகர்களிடையே ரஜினிகாந்த் பேசியதாவது:-

என் நடிப்புத் திறமையை முதன் முதலில் கண்டுபிடித்தது என் நண்பன் ராஜ்பகதூர். 1973-ல் முதல் முறையாக சென்னை வந்தேன்.

1960-களில் மதராஸ் குறித்து கர்நாடகாவில் பெருமையாக பேசிக்கொள்வார்கள். சென்னை எனக்கு எப்போதும் மெட்ராஸ்தான். 

தமிழ் சினிமாவிற்கு வந்தபோது எனக்கு தமிழும் தெரியாது, ஆங்கிலமும் பேச தெரியாது. ஆனால் என் நடிப்பை பார்த்து விட்டு பாலச்சந்தர், உன்னை 3 படங்களில் ஒப்பந்தம் செய்ய உள்ளேன். நீ தமிழ் மட்டும் கற்றுக்கொள், உன்னை எங்கே கொண்டு விடுகிறேன் பார் என்றார். பாலச்சந்தருக்கு நான் தத்தெடுக்காத குழந்தை மாதிரி. அதன் பிறகு பஞ்சு அருணாச்சலம் எனக்கு பல நல்ல படங்களை கொடுத்து, என்னை உயர்த்தினார். 

சுரேஷ் கிருஷ்ணா, மணிரத்னம் என்னை சூப்பர் ஸ்டாராக்கினர். இந்தியாவே என்னை திரும்பிப்பார்க்க வைத்தவர் ஷங்கர். அவர் பிரம்மாண்டமாக இயக்கி உள்ள 2.0 படம் ஏப்ரல் 14 ரிலீசாகிறது. அதன் பிறகு 2 மாதங்களில் காலா ரிலீசாகிறது. அதில் எனக்கு வித்தியாசமான வேடம் கொடுத்துள்ளார் ரஞ்சித். 

கனவுகளை அடைய நியாயமான முறையில் முயற்சி செய்ய வேண்டும். கனவு நிறைவேறாவிட்டால் கவலைப்பட வேண்டாம். என் உடல் ஆரோக்கியத்திற்கு தியானமே காரணம். ரசிகர்கள் அனைவரும் தியானம் செய்ய வேண்டும். நான் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற போது மீண்டும் உயிர் பெற்று வர ரசிகர்களே காரணம். மற்றவர்கள் உங்களை மதிப்பதை விட, தனிமையில் இருக்கும் போது உங்களை நீங்களே மதிக்கும்படியான சிந்தனைகள் இருக்க வேண்டும். பின்னர் உங்கள் குடும்பம், சுற்றத்தினர் மதிக்கும்படி நடந்து கொள்ள வேண்டும். என்றார்.

முன்னதாக, போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினி பேசுகையில், அரசியல் பிரவேசம் குறித்து தெரிந்து கொள்ள இன்னும் ஒரு நாள் பொறுத்திருங்கள். என்றார். மேலும், தான் அரசியலுக்கு வருவதை வரவேற்கவில்லை என வைகோ கூறியதாக எழுந்த தகவல் தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, அவருக்கு நன்றி என ரஜினி கூறினார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...