கிரண்பேடி ஆளுநரா இல்ல எதிர்கட்சி தலைவரா..? : புதுச்சேரி முதலமைச்சர் நாரயாணசாமி கேள்வி

டிசம்பர் 30

கிரண்பேடி ஆளுநரா அல்லது எதிர்கட்சி தலைவரா என்பது தெரியவில்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் ஆளுநர் கிரண்பேடிக்கும், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் கடும் மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியார்களிடம் கூறுகையில், உண்மைக்கு புறம்பான செயல்களைச் செய்வது, கிரண்பேடிக்கு வாடிக்கையாகிவிட்டது. இதுகுறித்து கிரண்பேடிக்கு பலமுறை கடிதம் எழுதியும் அரசின் நடவடிக்கைகளில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகிறார். கிரண்பேடி, ஆளுநரா அல்லது எதிர்க்கட்சி தலைவரா என தெரியவில்லை, இதற்கு முடிவு எட்டும் காலம் விரைவில் வரும். 

புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடி போட்டி அரசாங்கம் நடத்துகிறாரா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். ஆளுநர் கிரண்பேடியின் அறிக்கைகளும் செயல்பாடுகளும் அரசுக்கு எதிராக உள்ளது. புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட்டு கிரண்பேடி குழப்பம் விளைவிக்கிறார்.  புதுச்சேரியில் இரசிது தராமல் வரி ஏய்ப்பு செய்யும் வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...