நினைவு இல்லமாக மாறும் வேதா இல்லம் : ஜெ.,வின் போயஸ் வீட்டில் அதிகாரிகள் ஆய்வு


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா  இல்லம், போயஸ் கார்டனில் உள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றி பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என அரசு அறிவித்தது. இதையடுத்து, அந்த வீடு அரசு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நினைவிடமாக்கும் பணியை வருவாய் துறையினர் தொடங்கினர்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை முழுமையாக அரசுடைமையாக்கி, நினைவிடமாக மாற்றுவதற்கான பணிகள் இன்று தொடங்கின.  இதற்காக இன்று காலை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் போயஸ் கார்டன் வீட்டில் ஆய்வு செய்து வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் வீட்டை அளவிடும் பணி நடைபெற்று வருகிறது. அதிகாரிகளின் ஆய்வு செய்வதையொட்டி போயஸ் கார்டன் இல்லத்திற்கு இன்று கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. போயஸ் கார்டனைச் சுற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

போயஸ் கார்டன் இல்லம் நினைவிடமாக மாற்றப்படுவதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக அறிவித்த அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...