வரும் ஜன., 8-ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

தமிழக சட்டப்பேரவை ஜனவரி 8 ம் தேதி கூடும் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், அன்று, சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்ற உள்ளார்.

டிசம்பர் 28

தமிழக  சட்டப்பேரவை ஜனவரி 8 ம் தேதி கூடும் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், அன்று, சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்ற உள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடைசியாக ஜூனில் துவங்கி ஜூலையில் நிறைவு பெற்றது. அப்போது, மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும். அதன்படி, சட்டப்பேரவை வரும் ஜனவரி, 8ல் துவங்க உள்ளது. இதனை சட்டப்பேரவை செயலர் பூபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டப்படுவதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், அன்று, சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுவார். அதன்பின், ஆளுநர் உரை மீது, ஒரு வாரம் விவாதம் நடைபெறும். சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் முடிந்த பின், முதல்வர் பதில் அளிப்பார். அதன்பின், ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்படும். சட்டப்பேரவை எத்தனை நாட்கள் நடக்கும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...