தமிழகத்திற்கு ரூ.133 கோடி ஒகி புயல் பாதிப்புகளுக்கான இடைக்கால நிவாரண நிதி ஒதுக்கீடு

டிசம்பர் 28

ஒகி புயலால் ஏற்பட்ட பாதிப்புக்களை சரி செய்வதற்காக தமிழகத்திற்கு இடைக்கால நிவாரண நிதியாக ரூ.133 கோடியை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

கடந்த நவம்பர் மாதம் ஒகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தைத் தாக்கிய போது, கடலுக்குச் சென்ற மீனவர்கள் காணாமல் போகினர். புயல் மழை காரணமாக பல ஏக்கர் பயிர்கள் நாசமானது. மரங்கள் முறிந்து விழுந்தன. ரப்பர், தேக்கு, தென்னை என பலவகை மரங்கள் முறிந்து விழுந்தன. அதனால், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. சாலைகள் சேதமடைந்தன. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஐஏஎஸ் அதிகாரிகள் குமரியில் முகாமிட்டு புயலால் பாதிக்கப்பட்ட சேதங்களை மதிப்பிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர். 

இதனிடையே, ஒகி புயல் பாதிப்பை, இயற்கைப் பேரிடராக அறிவித்து, உரிய நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில், ஒகி புயலால் ஏற்பட்ட பாதிப்புக்களை சரி செய்வதற்காக தமிழகத்திற்கு இடைக்கால நிவாரண நிதியாக ரூ.133 கோடியை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்தத் தொகை வழங்கப்பட உள்ளது.

மத்திய குழு மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில், சேத மதிப்பீட்டின் அடிப்படையில் கூடுதலாக நிதி ஒதுக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயல் பாதிப்புக்களை மத்தியக் குழு நாளை ஆய்வு செய்ய உள்ள நிலையில், மத்திய அரசு இன்று இடைக்கால நிவாரண நிதியை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...