டிச., 31-ம் தேதி நள்ளிரவு இந்து கோவில்களை திறக்க தடை வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

டிசம்பர் 27

ஆங்கில புத்தாண்டையொட்டி, இந்து கோவில்களை நள்ளிரவில் திறந்து பூஜை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர் அஷ்வத்தாமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி ஜனவரி 1-ந்தேதி அன்று கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடத்துவது வாடிக்கையானது. சில கோவில்களில் டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவு நடை திறக்கப்பட்டு பூஜை நடத்துவது வழக்கம். ஆங்கில புத்தாண்டுக்கு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வது மற்றும் அதனை ஒரு விழாவைப் போல கொண்டாடுவது ஆகியவை இந்தியாவின் வேத கலாச்சாரம் கிடையாது. தெலுங்கு வருடப்பிறப்புதான் பொருத்தமான, சிறந்த கலாச்சாரம் ஆகும் என ஆந்திராவில் உள்ள கோவில்களில் புத்தாண்டு பூஜைகள் செய்யக் கூடாது என ஆந்திர மாநில அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பு கூறியது.

எனவே, ஆகம விதிமுறைகளை மீறி நள்ளிரவில் கோவில் நடையைத் திறக்க கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...