ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும் : ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை


டிசம்பர் 27

ரசிகர்கள் ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும் என்றும், அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வதாகவும் ராகவேந்திர மண்டபத்தில் 2-வது நாளாக ரசிகர்களை சந்தித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார். 

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்று விவாதங்கள் நடந்து வந்த நிலையில், நேற்று (26-ந்தேதி) முதல் அவர் மீண்டும் ரசிகர்களை சந்தித்து வருகிறார். நேற்று, அவர் பேசுகையில் வரும் 31-ம் தேதி அன்று தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்க உள்ளதாக கூறினார். இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். தனது வீட்டில் இருந்து புறப்பட்ட அவரிடம் அரசியல் குறித்தான கேள்வி எழுப்பியதற்கு, 31-ம் தேதி வரை பொறுத்திருங்கள் என்று பதிலளித்தார்.

ராகவேந்திரா மண்டபத்திற்கு வந்த பின்னர் ரசிகர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:- இரண்டாவது நாளாக உங்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவர்கள் குடும்பம்தான் முக்கியம். தாய், தந்தையர் வாழும் தெய்வங்கள். குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும், நமது சொத்து அவர்கள் தான். ரசிகர்கள் கட்டுப்பாடுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன், உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. இவ்வாறு கூறினார்.

நேற்று, தனது சினிமா வாழ்க்கை குறித்து பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்ட ரஜினிகாந்த், இன்று தனது பேச்சை சுருக்கமாக முடித்துக்கொண்டார். திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1,000 ரசிகர்கள் இன்று ரஜினிகாந்தை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...