ஜெயலலிதா மரண விவகாரம் : தினகரன், கிருஷ்ணப்ரியாவுக்கு விசாரணை ஆணையம் சம்மன்


டிசம்பர் 27

ஜெயலலிதா மரணம் தொடர்பாக  எம்எல்ஏ தினகரன் மற்றும் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் ஆகியோருக்கு  நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பது போன்ற வீடியோ வெளியாகிப் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் வெளியிட்டார். இது குறித்து ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் புகார் கூறப்பட்டது. இது தொடர்பர்க விசாரணை ஆணையம் வெற்றிவேலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அவர் நேரில் ஆஜராகி, வீடியோ தொடர்பான ஆதாரங்களை அளிக்க வேண்டும் எனவும் அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், எம்எல்ஏ தினகரன் மற்றும் இளவரசி மகள் கிருஷ்ணப்ரியா, ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் ஆகியோருக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

அதில், தங்களிடம் உள்ள வீடியோ ஆதாரங்களை 7 நாட்களுக்குள் ஒப்படைக்குமாறு 3 பேருக்கும் விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணப்ரியா வரும் ஜனவரி 2-ல் நேரில் ஆஜராகவும், 2016ல் போயஸ் கார்டனில் வேலை பார்த்தவர்கள் விவரம், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்குமாறு பூங்குன்றனுக்கும் சம்மனில் கூறப்பட்டுள்ளது. இதேபோல, அப்பல்லோ மருத்துவர்கள் சத்யபாமா ஜனவரி 2ம் தேதியும், சுதா சேய்யன் ஜனவரி 3ம் தேதியும் நேரில் ஆஜராகவும் விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...