இமாச்சல பிரதேசத்தின் முதலமைச்சராக பதவியேற்றார் ஜெய்ராம் தாகூர்

டிசம்பர் 27

இமாச்சல பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக ஜெய்ராம் தாகூர் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

இமாச்சல பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 66 தொகுதிகளில் 44 தொகுதிகளை பாஜக வென்றது. 21 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. பாஜக முதலமைச்சர் வேட்பாளர் தூமல் தேர்தலில் தோல்வியடைந்ததால், புதிய முதலமைச்சராக மூத்த தலைவர் ஜெய்ராம் தாகூர் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், இமாச்சல பிரதேச முதலமைச்சராக அவர் இன்று ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, மத்திய அமைச்சர்கள், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாஜக மூத்த தலைவர் அத்வானி, பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தாகூருடன் எத்தனை அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர் என்ற தகவல் வெளியிடப்பட்டது. 

அமைச்சர்கள் பட்டியல் விவரம் பின்வருமாறு:

சுரேஷ் பரத்வாஜ், ராஜீவ் பிண்டால், ராஜீவ் சேஜல், கோவிந்த் தாகூர், மகேந்தர் சிங், அனில் சர்மா, கிஷன் கபூர், விபின் பார்மர், சர்வீன் சௌத்ரி, விரேந்தர் கன்வார், ராம் லால் மார்கண்டே, விக்ரம் ஜெய்யால், ராஜேந்தர் கார்க், கமலேஷ் குமாரி, இண்டர் சிங் பால்வீர் வர்மா, விக்ரம் தாகூர். சபாநாயகராக ரமேஷ் தவால்லாம், துணை சபாநாயகராக ஹன்ஸ் ராஜ் ஆகிய பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் சட்டசபைக்கு 5-வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக அமையப் பெற்ற பாஜக அரசில் அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2006 முதல் 2009 வரை பாஜக மாநில குழுத் தலைவராக பதவி வகித்துள்ளார். 2007 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் பாஜக மாநிலத் தலைவராக பதவி வகித்துள்ளார். 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...