மத்திய அமைச்சர் கீழ்த்தரமாக பேசுவது வேதனை அளிக்கிறது - நடிகர் பிரகாஷ்ராஜ்

டிசம்பர் 26

மதச்சார்பற்றவர்களின் ரத்தம் மற்றும் பிறப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் ஹெக்டேவிற்கு, நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடக மாநிலம் கெப்பல் மாவட்டத்தில் நடைபெற்ற பிராமணர் இளைஞர் சங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் ஹெக்டே பேசுகையில், ஒரு இஸ்லாமியர் தன்னை இஸ்லாமியர் என்றும், கிறிஸ்துவர் தன்னை கிறிஸ்துவர் என்றும், பிராமணர் தன்னை ஒரு பிராமணர் என்றும் பெருமையாக கூறிக் கொண்டால் எனக்கு மகிழ்ச்சி. ஏனென்றால் அவர்களின் ரத்தம் என்ன என்பது அவர்களுக்குத் தெரியும். 

ஆனால், மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை. அவர்கள் என்ன ரத்தம் என்று தெரியாமல், அடையாளங்கள் இல்லாமல் இருக்கின்றனர். இவ்வாறு கூறினார். 

அமைச்சரின் இந்தக் கருத்திற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைச்சர் இவ்வளவு கீழ்த்தரமாக பேசுவது வேதனையளிக்கிறது. ரத்தம் மனிதனின் ஜாதி, மதத்தை நிர்ணயிக்காது. மதச்சார்பின்னமை, எந்த மதத்தையும் சார்ந்து இல்லை என்று அர்த்தமில்லை. எல்லா மதத்தையும் மதித்து ஏற்றுக்கொள்ளுதல். இவ்வாறு குறிப்பிட்டார். 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...