குல்பூஷன் ஜாதவின் குடும்பத்தினரை அவமரியாதையுடன் நடத்திய பாக்., - இந்தியா குற்றச்சாட்டு

டிசம்பர் 26

பாகிஸ்தான் சிறையில் இருக்கும் குல்பூஷண் ஜாதவை, அவரது மனைவி, தாய் சந்திக்க சென்ற போது, அவர்கள் கழுத்தில் அணிந்திருந்த தாலி, நெற்றியில் வைத்திருந்த பொட்டை அகற்ற கட்டாயப்படுத்தப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. 

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. அவரை தூதரக அதிகாரிகள் சந்திக்க மத்திய அரசு அனுமதி கேட்டபோது, அதற்கு மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான், குல்பூஷண் ஜாதவை அவரது மனைவி மற்றும் தாய் சந்திக்க அனுமதிப்பதாக அறிவித்திருந்தது. அதன்படி, இந்தச் சந்திப்பு நேற்று நடந்தது.

இந்த சந்திப்பு முடிந்து நாடு திரும்பிய இருவரும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினர். இந்தச் சந்திப்பு 3 மணி நேரம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் வெளியுறவு செயலர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனிடையே, வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், குல்பூஷண் ஜாதவை சந்திக்க சென்ற போது, அவரின் தாய் மற்றும் மனைவி தாலி, நெற்றியில் இருந்த பொட்டு ஆகியவை அதிகாரிகள் கட்டாயத்தின் அடிப்படையில் அகற்றப்பட்டன. இருவருக்கும் வேறு ஆடை கொடுத்து அணியக் கூறினர். சந்திப்பு முடிந்த பிறகு, ஜாதவ் மனைவி அணிந்த செருப்பு திருப்பித் தரப்படவில்லை. 

இந்த சந்திப்பின்பாது, ஜாதவ் நெருக்கடி மிகுந்த சூழ்நிலையில், ஏற்கனவே சொல்லி கொடுக்கப்பட்ட விஷயத்தையே கூறினார். அவரின் தோற்றமும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. விதிகளை மீறி ஜாதவ் குடும்பத்தினரை அந்நாட்டு பத்திரிகையாளர்கள் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு பல்வேறு தொந்தரவு கொடுத்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...