எம்எல்ஏ-வாக டிச.,29-ம் தேதி பதவியேற்கிறார் டிடிவி தினகரன்

டிசம்பர் 26

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரன் வரும் 29ம் தேதி எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொள்கிறார். தலைமை செயலகத்தில் மதியம் 1.30 மணியளவில் நடக்கும் நிகழ்ச்சியில் சபாநாயகர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

ஆர்.கே நகர் தொகுதிக்கு கடந்த 21-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதல் முன்னிலை வகித்து வந்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில் எல்லா சுற்றுகளிலும் முன்னிலை வகித்த அவர், 89 ஆயிரத்து 13 வாக்குகள் பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட 40 ஆயிரத்து 707 வாக்குகள் கூடுதலாகவே பெற்று வென்ற அவர் தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் முத்திரை பதித்தார்.

தினகரனின் வெற்றி தமிழக அரசியலில் ஏற்படுத்திய அதிர்வலைகள் ஓயாத நிலையில், வரும் 29-ம் தேதி அவர் முறைப்படி எம்எல்ஏ-வாக பதவியேற்க உள்ளார். மதியம் 1.30 மணிக்கு சபாநாயகர் தனபால் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்ய உள்ளார். பிப்ரவரி மாதம் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, சட்டசபைக்குள் முதன் முறையாக அவர் ஆர்.கே. நகர் எம்எல்ஏ-வாக நுழைய உள்ளார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...