ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஸ்டாலின் விளக்கம்


டிசம்பர் 26

வாக்குக்கு பணம் கொடுப்பதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டின் காரணமாகவே, ஆர்.கே. நகரில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்ததாக அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஆட்சி மாற்றத்தை கொண்டு வரும் சக்தி திமுகவுக்கு மட்டுமே உள்ளது. திமுகவின் தனித்தன்மையுடனும், தன்மானத்துடனும் உரசிப் பார்க்க வேண்டாம். களத்தில் தோற்றால் விருதாகவும், தோற்றால் விழுப்புண்ணாகவும் கருதும் பக்குவம் திமுகவுக்கு உள்ளது. ஊழல் கடலில் மூழ்கி கொண்டிருப்போர் மூலம் ஆட்சி மாற்றம் வரும் என கருதுவது பகல் கனவு. ஊழல்வாதிகளால் நல்லாட்சி வரும் என கருதுவது கற்பனையின் உச்சகட்டம்.

திமுகவை நேரடியாக எதிர்கொள்ள முடியாதவர்கள் விஷம பிரச்சாரத்தை நிறுத்தி கொள்ள வேண்டும். பணநாயகத்திற்கு பலி கடா ஆகிவிட்டது ஆர்.கே. நகர். இதை மறைத்துவிட்டு விஷம பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. அவதூறு பரப்புவோர் ஏமாறுவது நிச்சயம். புது உத்வேகத்துடன் திமுக செயல்பாடு தொடரும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...