13-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு: மீனவ கிராம மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர்களைத் தூவியும் அஞ்சலி

டிசம்பர் 26

13 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி, பாதிக்கப்பட்ட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர்களைத் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி இந்தோனேசியா அருகே கடலில் பாறைத் தட்டுகள் சரிந்ததால் ஏற்பட்ட நில நடுக்கத்தால் சுனாமி என்னும் ஆழிப்பேரலை உருவானது. இது வலுவடைந்து இந்திய பெருங்கடலில் ஆழிப்பேரலையை உருவாக்கி இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கடலோரப் பகுதிகளில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தில் சிக்கி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோரங்களில் வசித்தவர்களும், கடற்கரைகளுக்குச் சென்றவர்களும் உயிரிழந்தனர். பலத்த பொருள் சேதமும் ஏற்பட்டது. பலர் தங்கள் உடைமைகளையும் இழந்தனர்.

சுனாமியில் கன்னியாகுமரி, நாகை, கடலூர் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நாகை மாவட்டத்திற்கு அடுத்தபடியாக கடலூரில் சுமார் 600 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து ஆண்டுதோறும் டிசம்பர் 26ஆம் தேதி அன்று சுனாமி நினைவு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இயற்கையின் கோர தாண்டவம் நடந்து இன்றோடு 13 ஆண்டுகள் முடிந்து விட்டன. இன்று கறுப்பு தினமாக அனுசரித்து மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. மீன் சந்தைக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 2017-ல் மீண்டும் ஒரு சுனாமி ஏற்படும் என்று சமூக ஊடகங்களில் அடிக்கடி தகவல்கள் பரவி கடலோர மக்களை பீதியில் ஆழ்த்தி வந்தது. மாறாக, ஒகி என்ற புயல் காற்று உருவாகியது. இந்தப் புயல் குமரி மாவட்டத்தை மட்டுமே மையம் கொண்டு தாக்கியது. இதில், கடலுக்குச் சென்ற ஆயிரமாயிரம் மீனவர்கள் கடலோடு கலந்து மாயமாகி விட்டனர். கடந்த மாதம் 30-ந்தேதி அதிகாலையில்தான் இச்சோகம் நிகழ்ந்தது. இதிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மாண்டு போனார்கள். இன்னும் நூற்றுக்கணக்கானோர் கதி என்ன? என்பதே தெரியவில்லை.

இதனால் இந்த டிசம்பர் மாதம் குமரி மாவட்ட கடலோர மக்களுக்கு சோக மாதமாக மாறிப்போனது. வழக்கமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடும் அவர்கள் இந்த ஆண்டு எந்தக் கொண்டாட்டத்திலும் ஈடுபடவில்லை. கிறிஸ்துமஸ் நள்ளிரவு பிரார்த்தனையின்போது அவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஒகி புயலில் மாண்டவர்களுக்கும், மாயமானவர்களுக்கும் அஞ்சலி செலுத்தினர். நேற்று, நடந்த இந்த நினைவு பிரார்த்தனைகள் இன்று சுனாமி நினைவிடங்களில் தொடர்ந்தது.

குறிப்பாக குளச்சலில் 414 பேர் புதைக்கப்பட்ட கல்லறை முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்தனர். கொட்டில்பாட்டில் 199 பேர் இறந்த இடத்திலும், மணக்குடியில் 119 பேர் அடக்கம் செய்யப்பட்ட நினைவிடத்திலும் இந்த வழிபாடுகள் நடந்தன. கடலையும், அதில் எழும் பேரலையையும் கண்டு பயப்படாமல் கடல் மேல் பயணம் செய்யும் மீனவர்கள் சுனாமி, ஒகி புயலுக்கு பின்னர் தொழிலுக்கு செல்லவே அஞ்சும் நிலையில் உள்ளனர்.

சுனாமி நினைவு தினத்தையொட்டி இன்று கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள சுனாமி நினைவு பூங்காவில் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் அஞ்சலி செலுத்தினார். மணக்குடி, கொட்டில்பாடு, குளச்சல் பகுதிகளில் உள்ள கல்லறை தோட்டங்களில் ஏராளமான பெண்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர்களைத் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...