டுவிட்டரில் டிடிவி தினகரனுக்கு வாழ்த்து: மறுப்பு தெரிவித்து அமைச்சர் உதயகுமார் விளக்கம்

டிசம்பர் 26

ஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றிபெற்ற டிடிவி தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் தனது பெயரில் வெளியான பதிவுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். இதனையடுத்து, பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தினகரன் வீட்டுக்குச் சென்ற வேலூர் எம்.பி.செங்குட்டுவன் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதேபோல, தினகரன் இல்லத்திற்கு சென்று அதிமுக எம்பி சசிகலா புஷ்பா மற்றும் நடிகர் மயில்சாமியும் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும், பலர் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து கூறினர். 

இதனிடையே, ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதற்கு உள்ளபடியே மகிழ்ச்சி. ஜெயலலிதாவின் வாழ்த்துகள் அவரோடுதான் இருக்கிறது. வாழ்த்துகள் சார் என டுவிட்டரில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெயரில் ஒரு பதிவு வெளியாகி இருந்தது. 

இந்நிலையில், தினகரனுக்கு வாழ்த்துக் கூறியதாக வெளியாகியுள்ள டுவிட்டர் பதிவிற்கு அமைச்சர் உதயகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், டுவிட்டரில் தனது பெயரில் வெளியான பதிவுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த டுவிட்டர் கணக்கில் உள்ள பதிவுகளை ரத்து செய்யுமாறு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை தேவை. என்றார். 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...