குஜராத்தில் பாஜக தலைமையிலான அரசு பதவியேற்றது: முதலமைச்சராக விஜய் ரூபானி மீண்டும் பொறுப்பேற்பு

டிசம்பர் 26

குஜராத் முதலமைச்சராக விஜய் ரூபானியும். துணை முதலமைச்சராக நிதின் படேலும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குஜராத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 99 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக ஆட்சியை மீண்டும் தக்க வைத்தது. இதைத்தொடர்ந்து புதிய முதலமைச்சரைத் தேர்வு செய்வதற்காக கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் கடந்த 22–ந்தேதி நடந்தது. இதில் முதலமைச்சராக விஜய் ரூபானியும், துணை முதலமைச்சராக நிதின் பட்டேலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பின்னர் மறுநாள் மாநில ஆளுநர் ஓ.பி.கோலியை சந்தித்த பாஜக தலைவர்கள், மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினர். அதை ஏற்று, புதிய அரசை அமைக்குமாறு ஆளுநரும் அழைப்பு விடுத்தார். அதன்படி, குஜராத்தில் புதிய அரசு இன்று பதவியேற்றது.  மாநில தலைமை செயலகம் அருகே உள்ள திறந்தவெளி மைதானத்தில் இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், பிரதமர் மோடி, பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...