கார் வரி ஏய்ப்பு விவகாரம்: வேலைக்காரன் பட ”வில்லன்” போலீஸாரால் கைது

டிசம்பர் 25

கார் வரி ஏய்ப்பு விவகாரத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் கைதாகி பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

நடிகர், நடிகைகள் சொகுசு கார்களை போலியாக முகவரி கொடுத்து புதுச்சேரி போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சொகுசு கார்கள் வாங்கி வேறு மாநிலத்தில் பதிவு செய்து இருந்தாலும், காரை கேரளாவிலும் பதிவு செய்யவேண்டும் என்று அங்கு வாகன சட்டம் உள்ளது. இந்த விவகாரத்தில் நடிகை அமலாபால், பகத்பாசில், சுரேஷ் கோபி ஆகியோர் மீது வரி ஏய்ப்பு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து கேரள அதிகாரிகள் புதுச்சேரி போக்குவரத்து அதிகாரிகளுடன் விசாரித்தனர். இந்த நிலையில், மலையாள நடிகர் பகத் பாசிலும், புதுச்சேரி லாஸ்பேட்டை, புதுப்பேட்டை முகவரியைக் கொடுத்து காரை பதிவு செய்து இருப்பது அம்பலமாகி உள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வந்தது. இது போன்ற மோசடியில் சினிமா நட்சத்திரங்கள் மட்டுமின்றி யார், யார் ஈடுபட்டுள்ளனர்? என்பது குறித்து அவர்கள் விசாரிக்கத் தொடங்கி உள்ளனர். இதனால் நடிகர், நடிகைகள் கலக்கம் அடைந்தனர். 

இந்த நிலையில், வரி ஏய்ப்பு வழக்கில் நடிகர் பகத் பாசில் இன்று திருவனந்தபுரம் குற்றப்பிரிவில் ஆஜரானார். அங்கு அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அங்கு கைது செய்யப்பட்ட அவர் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். பகத் பாசில் தனது தவறை ஒப்புக் கொண்டதாகவும், அதற்குரிய அபராத தொகையை கட்டிவிடுவதாகவும் கூறி உள்ளதாகக் கேரள ஊடகங்கள் கூறி உள்ளன.

பகத் பாசில் பிரபல இயக்குநர் பாசிலின் மகன் ஆவார். சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் வேலைக்காரன் படத்தில் இவர் வில்லனாக நடித்து உள்ளார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...