பாக்., சிறையில் இருக்கும் ஜாதவுடன் குடும்பத்தினர் சந்திப்பு

டிசம்பர் 25

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இந்தியக் கடற்படை வீரர் குல்பூஷன் ஜாதவை இன்று அவரது மனைவி மற்றும் தாயார் ஆகியோர் சந்தித்தனர்.

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், பலூசிஸ்தான் மாகாணத்தில் வன்முறையைத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் கூறி, கடந்த மார்ச் மாதம் குல்பூஷன் ஜாதவ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. குல்பூஷனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக, ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதன் விசாரணை நடைபெற்று வருவதால் அவரது மரண தண்டனையை ஐ.நா. நிறுத்தி வைத்துள்ளது. 

இதனிடையே, குல்பூஷன் ஜாதவின் மனைவி மற்றும் தாய் அவரைக் காண வேண்டும் என்ற தொடர் முயற்சிக்கு இறுதியாக பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் இதை அனுமதிப்பதாக அந்நாடு தெரிவித்தது. இதனையடுத்து, பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜாதவ், இன்று இஸ்லாமாபாத்தில் உள்ள அந்நாட்டு வெளியுறவு விவகாரங்களுக்கான அமைச்சக அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். ஜாதவின் மனைவி மற்றும் தாய் ஆகியோர் இந்திய தூதரகம் மூலம் இந்தியாவிற்கான துணை தூதர் ஜெ.பி.சிங் ஆகியோருடன் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில் ஜாதவை சந்தித்தனர். 

சிறையிலிருந்து, வெளியுறவு அமைச்சக அலுவலகத்திற்கு ஜாதவ் அழைத்து வரப்பட்டதால் அவர் வரும் வழியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பத்திரிக்கையாளர்கள் படம் எடுக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...